Wednesday, April 24, 2013

வாய்ப்புக்காக வளைந்து கொடுக்க மாட்டேன்!


சில்க் ஸ்மிதாவின் கடைசி கால வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் "கிளைமாக்ஸ்'. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருப்பவர் சானாகான். இப்படம் தமிழில் "நடிகையின் டைரி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட சானாகான், "உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான செயல்தான் என்றாலும், வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையைக்கூட பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை. அது அந்தந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல. நான் வாய்ப்புகளுக்காக வளைந்து கொடுப்பதில்லை' என்று பேசப்பேச படக்குழு அதிர்ந்துவிட்டதாம்.

No comments:

Post a Comment