Wednesday, April 24, 2013

நானும் கூடவே இருக்கேன் அஜீத்திடம் அடம் பிடித்த மருத்துவர்


சிறுத்தை சிவா படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டுதான் தனது காலுக்கு ஆபரேஷன் என்று 

உறுதிபட கூறிவிட்டார் அஜீத். அவரது தொழில் பக்தியை கண்டு உள்நாடும் வெளிநாடும் ஒரேயடியாக நெக்குருகி நிற்க, அவரையே நெக்குருக வைக்கிறாராம் அஜீத்தின் டாக்டர்.
கார் சேசிங் காட்சியில் நடித்தபோது தனது காலில் விபத்து ஏற்பட்டு மேலும் ஒரு விழுப்புண் பெற்றார் அஜீத். அதற்கப்புறம் ஆபரேஷன் பண்ணாம இந்த காலை சரி பண்ண முடியாது என்று அவரது மருத்துவர் கூறிவிட, அதையும் செஞ்சுடலாம். ஆனால் ஷுட்டிங் பாதிக்குமே என்றார் அஜீத். இதற்காக பிரத்யேகமாக ஒரு காலுறையை தயாரித்து அணிந்தபடியே போக்கு வரத்திலிருந்தார் அஜீத்.
இந்த உறையோடுதான் அவர் திரையுலக உண்ணாவிரதத்திற்கும் வந்திருந்தார். விஐபி நடிகர்களின் முகத்தை விட இந்த காலுறைதான் அன்று அதிக புகைப்படக்காரர்களின் கேமிராவில் இடம் பிடித்தது. அதுபோகட்டும்... இப்போதைய விஷயத்துக்கு வருவோம்.
அஜீத்தின் இந்த குடும்ப டாக்டர் இப்போதெல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிடுகிறாராம். இந்த ஆபரேஷன் வரைக்கும் உங்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்வது அவசியம். ஷுட்டிங்கை அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க, நான் தினமும் ஸ்பாட்டுக்கு வருவதற்காகவாவது அனுமதிங்க என்றாராம். அஜீத்தின் பர்மிஷனுக்கு பிறகு தினந்தோறும் வந்தும் விடுகிறாராம்.
டைரக்டர் வேகமாக ஆக்ஷன் சொன்னாலும், மனசுக்குள் கட் சொல்லி மாய்ந்து மாய்ந்து போகிறாராம் இந்த மருத்துவர்.

No comments:

Post a Comment