Tuesday, April 23, 2013
பரத் அளவிற்கு சத்தியமாக என்னால் நடிக்க முடியாது: தனுஷ்
கொலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பின்பு மூன்று விதமான கதாபாத்திரத்தில் 555 என்ற படத்தில் நடித்து வருகிறார் பரத்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளார்.
இப்படத்தில் நடித்த பரத் குறித்து தனுஷ் கூறுகையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, பரத்தின் புகைப்படத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்துள்ளார் என்பது புகைப்படங்களைப் பார்த்த போது தெரிந்தது.
இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால், பரத் அளவிற்கு சத்தியமாக என்னால் சிரமப்பட்டு நடித்திருக்க முடியாது.
முயற்சி மெய்வருத்த கூலி தரும்ன்னு சொல்வாங்க. அதுபோல, பரத் மெய் வருத்தியிருக்கிறார் என்றும் அது கண்டிப்பாக அவருக்கு கூலியை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment