Tuesday, April 23, 2013

விபச்சாரப் பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ள நோட்டைத் தரும் ஆண்கள் !


விபச்சாரப் பெண்களிடம் வரும் ஆண்கள், உல்லாசம் அனுபவித்து விட்டு போகும்போது கள்ளநோட்டுக்களைக் கொடுப்பதாக கொல்கத்தாவில் சர்ச்சை எழுந்துள்ளது.கொல்கத்தாவின் மிகப் பெரிய விபச்சார மையமான சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதிக்கு நிறையப் பேர் வருவது வழக்கம். எப்போதும் ஆண்களின் கூட்டம் இங்கு நிரம்பி வழியும். இங்கு வரும் ஆண்களில் பலர் கள்ள நோட்டுக்களைக் கொடுப்பதாக தற்போது பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் பல பெண்கள் ஏமாந்து தவிக்கின்றனராம்.இதையடுத்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் நல்ல பணமா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய தர்பார் மஹிளா சமான்யா கமிட்டி என்ற என்ஜிஓ நிறுவனம், விபச்சாரப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

No comments:

Post a Comment