பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்க
ளின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடிக்கும் அவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அபிமானிகளுக்கு அடிக்கடி போன் போட்டு படவேட்டை நடத்தி வருகிறார். இதில் சில முன்னணி ஹீரோக்கள் காஜல் பக்கம் சாய்ந்திருப்பதால், ஹன்சிகாவுக்கு செல்லவிருந்த புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் அந்த படங்களை காஜல் கைப்பற்றி விட்டால், அடுத்த ரவுண்டில் படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார் ஹன்சிகா.
No comments:
Post a Comment