Tuesday, April 23, 2013

உதயம் என்.எச்.4 திரை விமர்சனம்

கலைஞர் கருணாநிதி இந்த படத்தின் வெளியீட்டு மூலம் ஒரு சந்தோஷம் அடைவார் ஆமா தன் மகன்கள் ஸ்டாலினும், அழகிரியும் ஒரு சைட்ல முட்டி கொண்டு இருந்தாலும், அவங்க பிள்ளைங்க ஒருத்தர் தயாரிச்ச படத்தை இன்னொருத்தர் வெளியிடறது மகிழ்ச்சி தானே – எந்த மகன்களின் பாசமோ / சண்டையோ பொய்யுனு தெரியலை…..சரி படத்திற்க்கு வருவோம்முதல்ல ஒரு டைட்டில் போடுறாங்க ” இந்த படத்தில் வரும் முறையை போலீஸார் கையாளுவதில்லைனு” அதிலே உற்சாகம் தொற்றி கொள்கிறது ஏதோ வில்லங்கமான மேட்டருன்னு ………….18 வயசுக்கு கீழே பொண்ணுகள், பசங்கள், குடி, டிரக்ஸ், போதை சிகரட்ட்ன்னு கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை படத்தை ரீமேக் பண்ணின மாதிரி படம்……..இதிலே கூட படிக்கும் சித்தார்த் தான் ஹீரோ,அவருக்கு மட்டும் 18 இல்லை, அதெப்படின்னு
கேக்குறவங்களுக்கு ஒரு சின்ன பிட்டை போடுறாங்க அதாவது அவர் சென்னையில படிக்கும் போது பிரச்சினையாம் அதனால் பெங்களூர் வந்து முதல்ல இருந்து படிக்கிறாராம்……. அதனால் அவர் மேஜர் அவர் லவ் பண்ணும் பொண்னுக்கு 17 முக்கால் வயசு.வழக்கம்போல் பெத்த அரசியல்வாதி பொண்ணு இந்த ஹீரோயின் – ஆடுகளம் தபஸி போல எங்கிட்டு இருந்தோ ஒரு மினி நமீதாவை பிடிசிக்கிட்டு வந்திருக்காங்க, இவரை ஒன்னு ரசிகர்களுக்கு ஓஹோன்னு பிடிக்கும் இல்லை அடுத்த படமே கஷ்டம், ஆனா நடிப்பு தான் கஸ்டம் வரவே மாட்டேங்குது , படத்தில முக்கால் வாசி டயலாக் கன்னடம், ஏன்னா பெங்களூர் பொண்ணாம், இந்த காதலுக்கு வழக்கம் போல அப்பா எதிர்ப்பு காட்ட அங்கிருந்து 18 வயசு கரெக்டா காலேஜ் முடியிற அன்னைக்கு வருதாம் அதனால பொண்ண தூக்கிகிட்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஹீரோ போவது தான் கதை,ஆனா 100 கிலோமீட்டர் கூட போகலை வழக்கம் போல ஆந்திரா குப்பத்தில கதை அப்புறம் தான் தெரிகிறது இந்த படம் தெலுங்கிலும் வரும் ஸ்ட்ரெயிட் படம் என்பதால்….. நல்ல வில்லன் ஒருவரை இந்த படத்தில் அறிமுகபடுத்தியிருக்காங்க அது யாருன்னா ஏபிசிடி படத்தில பிரபுதேவாவின் முன்னால் நண்பன் அந்த் நடன‌ கம்பெனி வச்சிருப்பாரே அவர் தான் – நல்ல பாடி லேங்குவேஜ் மற்றும் நடிப்பு மும்பாய் காரர் போலவே இல்லை – அவர் ஒரு போலீஸ் அதிகாரி – ஒரு ஃபேக் என்கவுன்ட்டர் பண்ணி அதை இந்த ஹீரோயின் அப்பா காப்பாத்துகிறார் அதனால் அவரின் மகளை கடத்தின ஹீரோவை புடிச்சி தரும்படி அவரை அனுப்புகிறார். இதையடுத்து பெங்களூர் அரம்பிச்சு ஹஸ்கோட்டை வழியா பங்காருபேட்டை போய் குப்பம் வந்து அவ்வளவு தான் படம்……!ஒரு நல்ல கதை ஆனா மொக்கை ஸ்க்ரீன் ப்ளே அதுவும் வெற்றி மாறன் மற்றும் இயக்குனர் மணி மாறன் சேர்ந்து செய்த ஸ்க்ரீன் பிளேவாம், லாஜிக் பெரிய ஓசோன் ஓட்டை போல், கதையை உன்னிப்பா கவனித்தா செம காமெடியா இருக்கும்,அதாவது ஆரம்பிக்கும் போது மூணுமாசம் முன்னாடினு போட்டு முதல் நாள் காலேஜை காட்டுவாங்க, ஆனா ஹீரோயினை கடத்தும் போது இஞ்சினியரிங் முடிக்கும் நாலாவது வருஷம் கடைசி நாள்னு காட்டுவாங்க, வாய்ஸ் டிராக்கர்னு ஒரு இருட்டு கடை அல்வா கிண்டியிருக்காங்க…. கொஞ்ச டெக்னாலஜி தெரிஞ்சவங்க சும்மா சிரி சிரினு சிரிக்கலாம்……..காலேஜ் பசங்களுக்கு முதல் பாதி பிடிக்கும் ஆனா மத்த பொதுசனத்துக்கு ஹூம் நான் வரலை அந்த விளையாட்டுக்கு………ஒரு பாட்டு சூப்பர் – ரீ ரிக்கார்டிங் / எடிட்டிங் / கேமரா எல்லாம் எல்கேஜி ரகம்……!.

No comments:

Post a Comment