Wednesday, April 24, 2013
நீண்ட இடைவேளைக்கு பின்பு விடிவி. கணேஷுடன் மீரா ஜாஸ்மின்
தரமான நகைச்சுவை கலந்த படங்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிகராக அறிமுகமாகி, ‘இங்க என்ன சொல்லுது‘ என்ற வசனத்தின் மூலமும், தனது வித்தியாசமான வசன குரல் வளம் மற்றும் உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த V.T.V. கணேஷ் தற்போது தனது V.T.V.PRODUCTIONS என்கிற நிறுவனம் மூலம் படத்தயாரிப்பில் இறங்கி விட்டார்.
தன்னை பிரபலமாக்கிய இங்க என்ன சொல்லுது’ என்ற வசனத்தையே தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு தலைபபாக வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விடிவி கணேஷ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா நடிக்கும் இப்படத்தில் கணேஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை இதுவரை பார்த்திராத வரையில் கவர உள்ளார் சந்தானம். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீநாத், மயில்சாமி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
சென்னையிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்பவர் காக்க காக்க, பில்லா 2, மற்றும் பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த R .D. ராஜசேகர்.
பிரம்மாண்டமான பல படங்களுக்கு அரங்கு அமைத்த ராஜீவன் கலை இயக்குனராக பணியாற்ற, நேர்த்தியான வேகமான படத் தொகுப்பின் மூலம் இன்றைய தலைமுறையைக் கவர்ந்த ஆன்டனி படத்தொகுப்பு செய்ய தரன் இசை அமைத்து உள்ளார்.
வானம் படத்தின் வசனகர்த்தா ஞான கிரியின் வசனத்தில், விஜய் படங்களான ப்ரியமுடன், யூத் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இப்படத்தை செல்வா என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment