Thursday, April 25, 2013
இளம் காதல் ஜோடியின் உயிரைப் பறித்த சந்தேகம்!
பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இளம் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியும், ராகம மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக குறித்த மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த மருத்துவ பீட மாணவர் சயனைட் அடங்கிய விச ஊசியை ஏற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவனின் ச டலம் குருநாகல் வாவி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்விருவருக்கு இடையில் ஏற்பட்ட சந்தேகமே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குறித்த மாணவியும் அவரது காதலனும் அண்மையில் கண்டியில் வாகனம் ஒன்றிற்குள் சிந்தையற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவகை பானத்தை பருகியதால் இவர்களுக்கு இவ்வாறு சிந்தையற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவந்தது.
சிகிச்சையின் பின் மாணவர் வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம் காதலியின் (மாணவியின்) நலம் விசாரிக்க பேராதனை வைத்தியசாலைக்குச் சென்ற காதலன் (மாணவன்) காதலிக்கு ஒருவகை திரவத்தை அருந்த கொடுத்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாணவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment