
தமிழ்சினிமாவில் தற்போதைய பரபரப்பான பேச்சு சிம்பு கொடுத்த பேட்டி தான். ‘ நானும் நயன்தாராவும் ஆத்மார்த்தமான நண்பர்கள்’ இந்த ஒரு வார்த்தை போதாதா கோடம்பாக்கத்து பல் இடுக்குகளுக்குள் சென்றுவர.
ஒரு பிளாஷ்பாக் போட்டு சிம்பு நயன்தாரா காதலித்ததிலிருந்து பிரிந்தது வரை நியாபகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். ’சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார்’ ஓபன் பேட்டி கொடுத்த நயன்தாரா மறுபடியும் எப்படி சிம்புவுடனான தனது உறவை புதுப்பித்தார் என தலையை பிய்த்துக்கொள்ளாத குறை.
இவர்களின் கேள்விக்கு சிலம்பரசனே
சிம்புவின் தோள் மீது சாய்ந்துகொண்டு நயன்தாரா போஸ் கொடுக்கும் ஃபோட்டோ தான் இணையதளங்களில் பலரது அரட்டைக்கு காரணமாக இருக்கிறது.
பதிலளித்துள்ளார் இது பற்றி பேசிய சிம்பு “ நயன்தாரா அற்புதமானவர். அவரது ஆத்மா சுத்தமானது. எங்களுக்குள் சண்டையெல்லாம் இல்லை. நாங்கள் இன்றும் நண்பர்கள் தான். பொதுநிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட பேசிக்கொள்வோம். மற்றபடி எங்களது தொழிலில் கவனமாக இருந்தோம்’ என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment