Wednesday, April 24, 2013
டாப்ஸி படத்தில்தான் இப்படி நீது சந்திரா ஆத்திரம்
பலருக்கு அரட்டை திண்ணையாக இருக்கும் ட்விட்டர், சிலருக்கு மட்டும் கருத்து திண்ணையாக இருந்து வருகிறது. இந்த திண்ணையில் அவ்வபோது நடக்கும் அக்கப் போர்களும் வாதங்களும் அட... நீங்க இவ்வளவு புத்திசாலியா? இவ்வளவு சமூக அக்கறையுள்ளவரா? என்ற அடுக்கடுக்கான ஆச்சர்யத்தை சிலர் மீது ஏற்படுத்தவும் தவறுவதில்லை. அப்படி சமீபத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்தி, இன்னொரு நடிகையின் இமேஜை சேதப்படுத்தியும் இருக்கிறார் நடிகை நீது சந்திரா.
அப்படியென்ன நடந்திருக்கிறது அங்கே?
டாப்ஸி இந்தியிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படம் ஒன்று சமீபத்தில் ரிலீசாகியிருக்கிறது. இதில் ஒரு நாய்க்கு 'ஆர்யப்பட்டா' என்று பெயர் வைத்திருக்கிறாராம் அந்த டைரக்டர். இதில்தான் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் நீது.
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரும் வாண சாஸ்திரத்தில் பெரிய மேதையுமாக திகழ்ந்தவரின் பெயர்தான் ஆர்யப்பட்டா. அவர் பெயரை போய் ஒரு நாய்க்கு வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் நன்றியில்லையா என்று பொங்கி வெடித்திருக்கிறார் நீது.
இதற்கு பதில் சொல்ல வேண்டியது டாப்ஸி இல்லை என்றாலும், எங்கேயோ இருக்கிற டைரக்டர் மீது பாய்வதை விட்டு விட்டு பக்கத்திலிருக்கிற பதுமை மீதுதானே கோபப்பட முடியும்.... அதனால் டாப்ஸி ஒழிஹ்...க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment